நம்புங்கள்!!
அரசாங்க வேலை (Government Job) உங்கள் கையில்!
அரசாங்க வேலை (Government Job) உங்கள் கையில்!
அரசு வேலை எனக்கு கிடைக்காது என உங்களுக்குள் இருக்கும் அழுத்தமான எண்ணத்தை தூக்கியெறியுங்கள்!!!. இதுவரை இல்லாத அளவில் அரசு வேலைக்கான காலிப்பணியிடங்கள் அதிக அளவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்-4 தேர்வுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே அரசு வேலை உறுதி. எனவேதான், குரூப்-4 தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் முயற்சி செய்கின்றனர்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஏராளமான மையங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கு செப்டம்பர் 8-ம் தேதிக்குள் டிஎன் பிஎஸ்சி இணையதளத்தின் www.tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண். அப்ஜெக்டிவ் (கொள்குறி வகை) முறையில் 200 கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு மற்றும் திறனறிவு (ரீசனிங்) பகுதியில் 100 வினாக்களும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும் இருக்கும். ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்.
பொது அறிவு பகுதியானது அனை வருக்கும் பொதுவானது. பொது தமிழ், பொது ஆங்கிலம்-இரண்டில் ஏதாவது ஒன்றை விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்து கொள்ளலாம்.
லட்சக்கணக்கில் போட்டியிடுகிறார்கள். எனவே, போட்டி கடுமையானதாக இருக்கும் என்று கவலைப்படவேண்டாம். அரசு வேலை என்ற ஆசையில் நாமும் எழுதிப் பார்ப்போமே என விண்ணப்பிப்பவர்களும், தேர்வுக்கான தயாரிப்பே இல்லாமல் எழுதுபவர்களும் இதில் பெரும்பான்மையினராக இருப்பர்.
டிஎன்பிஎஸ்சி நடத்தி வரும் போட்டித் தேர்வுகளுக்காக முழுமையான தயாரிப்பில் உள்ளவர்கள் மத்தியில் தான் உண்மையான போட்டி இருக்கும். எனவே, எண்ணிக்கையை பார்த்து பயப்படத்தேவையில்லை.
இன்று முதல், இருக்கும் காலத்தை துல்லியமாக திட்டமிட்டு பயன் படுத்தி தயாரிப்பில் ஈடுபட்டாலே வெற்றி வசப்படும்.
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான தமிழ் அல்லது ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை முழுமையாக படிக்க வேண்டும்.
நாட்டு நடப்புகள், கணிதம், திறனறிவு, அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் தெளிவாக படிப்பது அவசியம்.
மேலும் பல முக்கியத் தகவல்களை காண இங்கே கிளிக் செய்யுங்கள் !
(உங்களுக்காக மட்டும்)
குரூப் 4 தேர்வு அறிவிப்பு :
விண்ணப்பிக்க கடைசி நாள் - 16.09.2016
தேர்வு நாள் - 06.11.2016
விரைந்து விண்ணப்பியுங்கள் !
வெற்றி வாகை சூடுங்கள் !!!


0 comments:
Post a Comment